spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

சாத்தான்குளம் மாசற்ற இருதய ஆலய 165 வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் மாசற்ற இருதய ஆலய 165 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அமைந்துள்ள இதய நோய்களை குணமாக்கும் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 165 வது ஆண்டு திருவிழா 04.09.2026 வெள்ளி மாலை 07:00 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக காலையில் சிதம்பராபுரம் பங்குத்தந்தை கலைச்செல்வன் தலைமையில் திருப்பலி, ஜெபமாலை திருப்பலி நடந்தது.

மாலை மணப்பாடு வட்டார முதன்மை குரு பென்சியர் தலைமையில் கொடியேற்றம் நற்கருணை ஆசீர் நடந்தது. கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமடம் அருட்தந்தை ஆரோக்கியராஜ் மறையுறை வழங்கினார்.

செப்டம்பர் 13ஆம் தேதி பத்தாம் திருவிழாவின் போது புனித மாசற்ற இருதய அன்னையின் அற்புத தேர் பவனி நடைபெறும்.

இவ்விழாக்களின் ஏற்பாடுகளை பங்கு தந்தை செல்வ ராயர் உதவி பங்கு தந்தை எஸ்தாக், திருவிழா குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்