நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பங்குக்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஞாயிற்றுக்கிழமை 30 ம் தேதி 1ம் திருவிழா மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடந்தது. சாத்தான்குளம் உதவி பங்குத்தந்தை எஸ்தாக் தலைமை வகித்து கொடியேற்றி மறையுரை ஆற்றினார்.
பிரகாசபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் வரவேற்றார். இதில் பிரகாசபுரம் , தோப்பூர், நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள இறை மக்கள் மற்றும் ஊர் மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை பவனியும், திருப்பலியும் நடக்கிறது.
6 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 8 ம் திருவிழா மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி, திருப்பலி நடக்கிறது. தைலாபுரம் பங்குத்தந்தை ராபின் ஸ்டேன்லி தலைமை வகித்து மறையுரை ஆற்றுகிறார்.
7 ம் தேதி ( திங்கட்கிழமை) 9 ம் திருவிழா மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை , திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை பால் ரோமன் தலைமை வகித்து மறையுரை ஆற்றுகிறார். இதனை தொடர்ந்து சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

8 ம் தேதி ( செவ்வாய்க்கிழமை) 10 ம் திருவிழா காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. மன்னார்புரம் இளையோர் பணிக்குழு செயலர் சைமன் ஆல்டஸ் தலைமை வகித்து மறையுரை ஆற்றுகிறார். மாலை 6 மணிக்கு அன்னையின் தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமையில் மாதாவனம் ஆலய இறை மக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


