spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதுகலை மாணவர்களுக்கு வரவேற்பு

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத் துறை மாணவ, மாணவியர்களை வரவேற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கி பேசினார். முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் வால்சா எபநேசர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவி ஜாஸ்மின் சந்திரமதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் 2026-27ம் ஆண்டிற்கான முதுகலை வரலாற்றுச் சங்க செயலராக மாணவர் ஜெயசூர்யா இம்மானுவேல், , பொருளாளராக மாணவி பவதாரணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராபர்ட்சன் பங்கு பெற்று பரிசுகள் வழங்கினார்.

ஏற்பாடுகளை கல்லூரி செயலர் எஸ்டிகே ராஜன், முதல்வர் பென்னிசன், ஒருங்கிணைப்பாளர்கள் முதுகலை வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் சந்திரா, பெர்சியா லோயிசாள், கெத்சியாள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்