spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

நாசரேத்தில் மாரத்தான் போட்டி

நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பள்ளி மாணவ மாணவியருக்கான மாரத்தான் போட்டி நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியினை நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் முன்னிலையில் சாத்தான்குளம் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் முதலில் மாணவிகளுக்கும் அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

800 மாணவ மாணவியர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். நாசரேத் சமாரிட்டன் பிட்னெஸ் ஜிம் மற்றும் நம்ம நாசரேத் நல்ல நாசரேத் இயக்கங்கள் இணைந்து நடத்திய இம்மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் வன சுந்தர், நாசரேத் மெர்கண்டைல் வங்கி கிளை மேலாளர் விக்னேஷ், சத்யா ஏஜென்சீஸ் மேலாளர் ஸ்ரீ ராம் ஆகியோர் பரிசு தொகையினையும் கேடயத்தையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுபஸ்ரீ ஜுவல்லரி உரிமையாளர் சரவணன், எஸ் எம் ஹோம் டைல்ஸ் உரிமையாளர் முகமது இஸ்மாயில், பிஜிபி கன்ஸ்ட்ரக்சன் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நம்ம நாசரேத் நல்ல நாசரேத் அமைப்பை சேர்ந்த மருத்துவர் விஜய் ஆனந்த், ராமச்சந்திரன், அகிலன், ஸ்ரீராம், கல்யாணசுந்தரம் மற்றும் பலர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்