நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில் 80 வது சுதந்திர தின விழா சிறப்பு முகாம் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், செவித்திறன் குன்றியோர் இல்ல மாணவ, மாணவியர்கள் மற்றும் முதியோர் இல்ல முதியோர்களிடையே வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நாசரேத் மர்காசிஸ் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், செவித்திறன் குன்றியோர் இல்ல மாணவ, மாணவியர்கள் மற்றும் கனோன் ஆர்தர் மர்காஸிஸ் முதியோர் இல்லங்களில் உள்ளோர்களிடையே 80 வது சுதந்திர தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் மற்றும் திருமறையூர் சேகரத் தலைவர் குருவானவர் ஜான் சாமுவேல் தேசிய கொடியேற்றி வைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
திருமறையூர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளித் தாளாளர் டேவின் சாலமோன், தலைமை ஆசிரியை மெற்றில்டா ஜெசி, செவித்திறன் குறையுடையோர் பள்ளித் தாளாளர் ஆன்சன், தலைமை ஆசிரியை ஜெஸ்ஸி கரோலின், முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் லில்லி ஜெபக்குமார், முதுநிலை ஆசிரியர் கோல்டா, சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித் செல்வ சுந்தர், தனபால், ஓவிய ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமை தாங்கினார்.
குருவானவர் ஜான் சாமுவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிறைவாக ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் நன்றி கூறினார். அனைவருக்கும் சுதந்திர தின விழா விருந்து வழங்கப்பட்டது.
இச் சிறப்பு முகாமில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் பாபி ராஜாமணி, பிரதீப்,ஜெர்ரி, பவன் குமார் மற்றும் மாசாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கிரேஸ் பல்பொருள் அங்காடி தொழிலதிபர் சுதாகர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல் மற்றும் ரீபைனர் மேஷாக் ஆகியோர் செய்திருந்தனர்


