ஆழ்வார்தோப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீபராங்குகநல்லூர் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட ஆழ்வார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் புவனேஸ்வரன்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை, கோவையில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் புவனேஸ்வரன் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, டி.டி.வி. தினகரனின் அமமுகவில் இணைந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் புவனேஸ்வரன் செயல்பட்டு வந்தார்.
திடீரென அரசியல் பணிகளில் விலகி அமைதியாக இருந்து வந்த வழக்கறிஞர் புவனேஸ்வரன் அமமுகவில் இருந்து விலகி, தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸிஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
வழக்கறிஞர் புவனேஸ்வரன் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஸ்ரீநாத்தை சந்தித்தும் வாழ்த்து பெற்றார்.
வழக்கறிஞர் புவனேஸ்வரனுக்கு மாவட்ட செயலாளர்கள் பிரைட்டர் (தெற்கு) சரவணன் எம்.எல்.ஏ., (மேற்கு) நிர்வாகிகள் ஸ்ரீவை சிவராமலிங்கம், வழக்கறிஞர் சங்கரலிங்கம் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016ம்ஆண்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் புவனேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அரசியல் சூழ்ச்சியால் அவருக்கு அந்த வாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு அமமுக சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் புவனேஸ்வரன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


