spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

பொறியியல் பராமரிப்பு பணி: நெல்லை – திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் சில நாட்கள் ரத்து!

பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நெல்லை- திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில்கள் ஆகஸ்ட் 12 முதல் சில நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி,

வருகிற ஆகஸ்ட் 12, 13 ஆகிய இரு தினங்கள் நெல்லையில் இருந்து காலை 7:10 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் ரயில் வண்டி எண் 56751 மற்றும் திருச்செந்தூரில் இருந்து மாலை 4:25 மணிக்கு நெல்லை செல்லும் ரயில் வண்டி எண் 56754 ஆகிய 2 ரயில்கள் முழுமையாகவும், பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16731 , 16732 நெல்லை- திருச்செந்தூர் இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12,13) திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1:50 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும்.

மேலும் திருச்செந்தூரில் இருந்து காலை 10 மணிக்கு நெல்லை செல்லும் வண்டி எண் 56004, மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 4:30 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் ரயில் வண்டி எண் 56003 ஆகிய இரு ரயில்கள் ஆகஸ்ட் 13,14,17,22,24,25 ஆகிய 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

இதனால் பயணிகள் தங்கனது பய ணத்தை முன் கூட்டியே திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்