spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்

போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் நாசரேத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாசரேத் காவல் துறை மற்றும் திருநெல்வேலி சூரியா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

முகாமினை சாத்தான்குளம் டிஎஸ்பி செல்வராஜ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை சூரியா மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டு 100 க்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் நாசரேத், பிரகாச புரம், மூக்குப்பீறி, மணிநகர், ஞானராஜ்நகர், வகுத்தான்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் பயன் அடைந்தனர்.

நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் காவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்