Thu. Jan 15th, 2026

ஏரல் உயர்மட்ட பாலத்தை விரைவில் சீரமைக்க கோரி இந்து முன்னணியினர் தூத்துக்குடியில்  ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்றின் உயர் மட்ட பாலத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் பழைய பாலத்தை சீரமைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காந்தி சிலை அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் குமரி பிரபாகர் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் நாராயணன் ஏறல் நகர தலைவர் சிவராமன் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி சந்தானகனி இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர்கள் மகேஸ்வரி பிரபாகர் சொர்ண சுந்தரி ஜானகி செல்வமணி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சுப்புராஜ் மற்றும் நாசரேத ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நகர கிளை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

ந. பாலசுப்ரமணியன்,
நிருபர், தூத்துக்குடி

Related Post