spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

கறுப்பு பலூன் பறக்கவிட்டு காங்கிரஸ் நடைபயணம்

ஸ்ரீவையில் காங்கிரஸ் நடைபயண போராட்டம் நடத்தியது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆலோசனையின் பேரில், தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்திட வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபயண பேரணி நடந்தது.

பேரணிக்கு, ஸ்ரீவை வட்டார தலைவர் நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் சீனி ராஜேந்திரன் தொகுதி மறுவரை மசோதாவை ரத்து செய்திடுவதற்கான போராட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

மேடைப்பிள்யை£ர் கோயில் முன்பு துவங்கிய நடைபயண பேரணி கறுப்பு பலூன் பறக்க விட்டு முடிவில் தேவர் சிலையில் முடிந்தது.

பேரணியில், வட்டார தலைவர்கள் ஆழ்வார்திருநகரி கோதண்டராமன், சற்குரு, புங்கன், பாலசிங், பிரபு, துரைராஜ் ஜோசப், சக்திவேல் முருகன், பார்த்தசாரதி, ஸ்ரீவை வட்டார செயலாளர் நிலமுடையான், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சேவாதள தலைவர் பிச்சக்கண்ணு, கிராம கமிட்டி தலைவர்கள் வெள்ளூர் மகேஷ், பால்ராஜ், சண்முகசுந்தரம், சுடலை, நகர தலைவர்கள் கைலாசம், ராஜ்குமார், மகளிரணி நிர்வாகிகள் மாரியம்மாள், ஜூலியட், பஞ்சவர்ணம், மங்களம், உமாதேவி, பூங்கொடி, செல்வி, சுப்புலெட்சுமி, சந்தியா, சாரதா, பொன்லதா, நிர்வாகிகள் புகாரி, ஆஸ்கின் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். முடிவில், வட்டார தலைவர் நல்லக்கண்ணு நன்றி உரையாற்றினார்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்