ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினம் மவுன அஞ்சலியுடன் கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஸ்ரீவை நகரம் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் மேடைப்பிள்யை£ர் கோயில் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் சுப்புராஜ் தலைமை வகித்தனர்.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகப்பெருமாள் தலைமையில் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, திமுகவினர் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதில், மாவட்ட பிரதிநிதிகள் ஆழ்வார்தோப்பு அருண்கிருஷ்ணன், சின்னபாண்டி, ஸ்ரீவை டவுன் பஞ்.துணை தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் டவுன் பஞ்.தலைவர் கந்தசிவசுப்பு, மாணவரணி பொன்இசக்கி, இளைஞரணி செந்தில், சுப்புராஜ், இசக்கிபாண்டியன், கவுன்சிலர் சாலமோன், ராகவன், நிர்வாகிகள் முத்துப்பாண்டி, வக்கீல் சங்கரன், அண்ணாமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.


