spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

கருங்குளத்தில் திமுக தலைவர் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிப்பு

கருங்குளத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவுதினத்தை திமுகவினர் மவுன அஞ்சலி அனுசரித்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழிகாட்டுதல்படி, கருங்குளம் மத்திய ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவுதினம் இன்று(வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டிலுள்ள கருங்குளம் சத்திரத்தில் நடைபெற்ற 8ம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான வசந்திமுருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் வேல்முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கால்வாய் நம்பிபாண்டியன், ஆறாம்பண்ணை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல்காதர், வர்த்தகர் அணி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கருங்குளம் மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, திமுகவினர் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி நினைவுதினத்தை கடைபிடித்தனர்.

இதில், கிளை செயலாளர்கள் முருகன், தர்மலிங்கம், காஜாமுகைதீன், முத்து, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சுடலைமணி, வழக்கறிஞர் குணசேகரன், முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்