spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என த வெ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பொது மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறை படுத்தி வருவதனால் பொது மக்களிடடையே த வெக அரசின் மீது வெறுப்பை உண்டாக்கும் .மேலும் அந்த அந்த தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் அரசு மூலமாக வரும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்து வரும் சட்ட மன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறை படுத்துவதனால் அந்த தொகுதியில் எந்த ஒரு வேலையும் நடை பெறாமல் நின்று விடும் இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் மட்டுமே என்பதை தவெக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

த வெ க ஆட்சியில் தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது தொடர்ந்து வழக்கு மற்றும் கைது செய்து சிறை படுத்தி வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை ஏன்றால் பாமர மக்களின் நிலை என்னவா இருக்கும் என்கிற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன ?

எனவே அவதூறாக பேசும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீது சட்ட ரிதியாக வழக்கு பதிவு செய்யலாம் ஆனால் கைது செய்து சிறை படுத்தினால் மட்டும் அவர்களை ஒடுக்க முடியுமா ? ஆகவே சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான கைது செய்து சிறை படுத்தும் நோக்கத்தை த வெ க அரசு கை விட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்