Mon. Dec 23rd, 2024

நாசரேத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப ஐக்கிய கூடுகை விழா

நாசரேத், ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப ஐக்கிய கூடுகை விழா நடைபெற்றது.

விழாவில் துவக்கத்தில் ஓய்வு பெற்ற குருவானவர். தேவராஜ் ஞானசிங் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஆஷா ஜேம்ஸ் வேத பாடம் வாசித்தார். ஓய்.எம்.சி.ஏ தலைவர் எபனேசர் வரவேற்புரை வழங்கினார்.

தொழிலதிபர் கேர்சோம், ஓய்.எம்.சி.ஏ நெல்லை மண்டல துணை செயலர் பொன்ராஜ், மர்காஸ்சியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ரூபன் துரைசிங், மூக்குபீறி ஏக இரட்சகர் சபை தலைவர் மத்தேயு, பொறியாளர் ரஞ்சன் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் நாசரேத், தூய யோவான் பேராலய பெண்கள் பாடல் குழுவினர், மற்றும் ஓய்.எம்.சி.ஏ அங்கத்தினர் சிறப்பு பாடல்களை பாடினர்.

தொடர்ந்து நாசரேத் சேகர குருவானவர் அருட்திரு. ஹென்றி ஜீவானந்தம் கலந்து கொண்டு திருமறை பகுதியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வழங்கினார்.

இந்நிகழச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குருவானவர். பொன் செல்வன் அசோக் குமார், பிரகாசபுரம் சேகர குரு நவராஜ், திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் மற்றும் நாசரேத் பேராலய உபதேசியார் ஜெபராஜ் ஜெசு செல்வன் கலந்து கொண்டனர்.

இதில் நாசரேத்தில் உள்ள நல்ல சமாரியன் மன நலம் குன்றியோர் இல்லம், திருமறையூர் காது கேளாதோர் பள்ளி, மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி, கல்வாரி சேப்பல் டிரஸ்ட் ஆகிய மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஓய்.எம்.சி.ஏ நிர்வாகத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஓய்.எம்.சி.ஏ செயலர் சாமுவேல், ஆர்ம்ஸ்ட்ராங், புஷ்பராஜ், ஜட்சன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் லேவி அசோக் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *