நாசரேத் நூலகத்தில் பாரதியார் பிறந்த நாள் அனுசரிப்பு
நாசரேத்தில் நூலக த்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நூலக அலுவலக அரங்கில் வைத்து நடைபெற்றது.
வாசகர் வட்ட தலைவர் ஓய்வு பெற்ற தாசில்தார் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார். தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வருபன் இலக்கியத்துடன் வரவேற்றார். கவிஞர் சிவசுப்பிரமணியன் கவிதை வாசித்தார்.
வாசகர் வட்டம் முன்னாள் தலைவர் ஒய்வு பெற்ற பேராசிரியர் காசிராஜன் மகாகவி பாரதியார் காலத்தை வென்ற தலைவன் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் கவிஞர் சிவா,ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்ராஜ்,வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் கணேசன், விபின் ஜெயக்குமார், ஜான் பிரிட்டோ, செல்லப்பாண்டியன், டாக்டர் விஜய் ஆனந்த், மந்திரம், சங்கர்.உட்பட பல்வேறு இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கூட்டுறவுத்துறை அலுவலர் வாசகர் வட்டம் முன்னாள் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
த. ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்
94 87 44 56 55