spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

நாசரேத்தில் வணிகர் சங்க ஆண்டு விழா

நாசரேத்தில் நகர வணிகர் சங்க ஆண்டு விழா நடந்தது.

நாசரேத் நகர வணிகர் சங்க 26 வது ஆண்டு விழா ஜோதி மாளிகையில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் அகிலன், ஏரல் சுபஸ்ரீ
ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினர் ரஞ்சன் வரவேற்றார். நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், சென்னை தொழிலதிபர் ஜெகன் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

நாசரேத் _ குரும்பூர் சாலையை விரிவுப்படுத்த வேண்டும்,  நாசரேத்தில் 4 கம்பி ரயில்வே தண்டவாளத்திற்கு தென் பகுதியில் இருந்து இடையன்விளை வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும், நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் நலன்கருதி நாசரேத்தில் 24 மணி நேரமும் படுக்கை வசதியுடன் செயல்படக்கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடையன்விளை, திசையன்விளை, குட்டம், உடன்குடியில் இருந்து நாசரேத் வழியாக சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ள அரசு விரைவு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும், நாசரேத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியை நிர்வாகக்குழு உறுப்பினர் பாபு செல்வன் தொகுத்து வழங்கினார். நாசரேத் பேரூராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி பரிசு வழங்கப்பட்டன.

இதில் வியாபாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன் தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்