ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீமுத்தாரம்மன் சமேத உலகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கொடை விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஸ்ரீமுத்தாரம்மன் வழிபாட்டுக் குழுவினர் மூலமாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, இந்தாண்டிற்கான கொடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. கொடை விழாவில் இன்று (செவ்வாய்கிழமை) மதியம், மஞ்சள் பொங்கல் விடுதலுடன் மதியக் கொடை நடைபெற்றது.
தொடர்ந்து, அம்மனுக்கு அலங்கார தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இக்கொடை விழாவின் சிறப்பாக, முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ள அந்த தெரு பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமலெட்சுமணன் தலைமையில், முன்னாள் ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளர் முருகன், தவெக நிர்வாகி காசிராஜன் ஆகியோர் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கினர்.
இதில், திமுக நிர்வாகி சண்முகசுந்தரம், முகேஷ், சமையல் கலைஞர் முருகன், அதிமுக வார்டு செயலாளர் இருளப்பன் மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள், தெருமக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


