நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு பேரணி நடந்தது. ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
பேரணி நாசரேத் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சந்தி பஜார் வழியாக மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி வரை சென்றது. டெங்கு ஒழிப்பு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டது.
வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பேரணியில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஜேசுராஜ், ஜான் நியூமன், மகேஷ்குமார், அனீஸ், அஸ்வின்பர்ன், நரேன்கார்த்திக், நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் குமார், காவலர் அம்சுராஜ் மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டார டெங்கு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பரமசிவன், உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


