spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர் பகடிவதை தடுப்புக் குழு சார்பில் வளமான எதிர்காலத்திற்கான இளம் பெண்களை வலுப்படுத்தும் சிங்கப்பெண் என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியருமான ஞானசுமதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட சிங்கப்பெண் சிறப்புப் படையை சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் ஆரோக்கியா ஜென்சி மற்றும் அவரது குழுவினர் கலந்துகொண்டு, பெண்களின் பாதுகாப்பு, சுயபாதுகாப்பு, இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, பாலின சமத்துவம், தன்னம்பிக்கை வளர்ப்பு மற்றும் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் குறித்து செயல்முறை விளக்கங்களுடன் உரையாற்றினர்.

மேலும், மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர் பகடிவதை தடுப்புக்குழு உறுப்பினரும், கல்லூரி நூலகருமான ஜாய் சோபினி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரிச்செயலர் எஸ்டிகே ராஜன், முதல்வர் பென்னிசன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்