spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காசீஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாமானது நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் நடைபெற்றது.

முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் கோயில் ராஜ் ஞானதாசன் வரவேற்புரை நிகழ்த்தி துவக்கி வைத்தார். சிவில் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். துறைத்தலைவர்கள் சோபியா பிரபாகர், பெனிட்டா ராஜு, சிவமுருகன், ஜான் வெஸ்லி, பிரபாகர் வேத சிரோமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி தலைமையில் தூத்துக்குடி ரத்த வங்கி ஊழியர்கள், உடையார் குளம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக நடத்தினர்.

இதில் 65 மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் செயற்குழு உறுப்பினருமான தொழிலதிபர் அருள் ராஜா தலைமையில், முதல்வர் கோயில் ராஜ் ஞான தாசன், பர்சர் முத்து சந்திர சேகர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர், ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்