நாசரேத் கேவிகே சாமி சிலை அருகே காமராஜர் மோட்டார் மெக்கானிக் ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சங்க தலைவர் மகாராஜா தலைமை வகித்தார். நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், முன்னாள் துணை தலைவர் மத்தேயு ஜெபசிங், மணிநகர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஏற்பாடுகளை சங்க தலைவர் மகாராஜா தலைமையில் துணைத்தலைவர் ஸ்டான்லி, செயலாளர் சுந்தர்ராஜ், துணை செயலாளர் கோபால்,
பொருளாளர் செல்வம் மற்றும்
நிர்வாகிகள் செய்திருந்தனர்.


