Mon. Jun 30th, 2025

முதலூரில் இலவச தேனி வளர்ப்பு பயிற்சி முகாம்


மத்திய அரசு கதர் கிராம தொழில் ஆணையம், முதலூர் வீட்ஸ் நிறுவனம், முதலூர் தேனி வளர்ப்போர் கூட்டமைப்பும் இணைந்து ஆறு நாட்கள் இலவச தேனி வளர்ப்பு பயிற்சி முகாம் முதலூர் வீட்ஸ் அலுவலகத்தில் நடந்தது.

முதலூர் வீட்ஸ் நிறுவன இயக்குநர் சார்லஸ் தலைமை வகித்தார். மத்திய அரசு கதர்கிராம தொழில் வாரிய ஓய்வு பெற்ற இணை இயக்குனர் மோசஸ் பயிற்சியளித்தார்.

தேனீ வளர்த்தல், தேனை பிரித்து எடுத்தல், தேனிக்கு ஏற்படும் நோய்களை கண்டறிதல் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது.

ஐம்பது பேர் பயிற்சி பெற்றார்கள். வீட்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய கீதா, மைக்கேல் விஜய், ஜோதிகா ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் இம்மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மீண்டும் நடைபெறும் என வீட்ஸ் இயக்குனர் சார்லஸ் கூறினார்.

Related Post