spot_img
25.8 C
New York
Wednesday, June 3, 2026

Buy now

spot_img

பேய்க்குளம் முசலை குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் ஊரில் உள்ள  முசலைகுளத்தில் (01.02.2026) சுமார் இரவு 9 மணியளவில் தூத்துக்குடி  புதுக்கோட்டை வி சவேரியார்புரம் ஊரைச் சேர்ந்த ரூபன் என்பவரின் மகன் ஜெபசீலன் (வயது 22) தனது ஊரைச் சேர்ந்த 3 நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

மேற்படி மது அருந்திய போது ஜெபசீலன் என்பவர் முசலைகுளத்தில் உள்ளே தவறி விழுந்து விட்டதாக நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

உடனே உடன் இருந்த சக நண்பர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து சுமார் 1/2 மணிநேரம் தேடுதலுக்கு பிறகு ஜெபசீலன் உடலை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்