spot_img
25.9 C
New York
Thursday, July 16, 2026

Buy now

spot_img

நாங்குநேரி அருகே கும்பல் தாக்கி இரண்டு பேர் பலி – பலர் படுகாயம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டூவீலர்களில் அரிவாள்களுடன் வந்த கும்பல் நடத்திய அரிவாள் வெட்டு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது 3 டூ வீலர்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த  கும்பல் திடீரென தாக்குகல் நடக்கினர்

அங்கு இருந்தவர்களை சரமாரியாக வெட்டி அச்சுறுத்தினர். இந்த சம்பவத்தில் பலருக்கு வெட்டு விழுந்தது.

இதில் சம்பவம் நடந்த இடத்தில் 2 பேர் இறந்த நிலையில் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஜான் (50) என்பவர் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய கும்பல் வேறு கிராமத்திற்குச் சென்றும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்பொழுது மக்கள் சாலை முறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்