spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

தவெக ஐ. டி. விங் செயலாளர் பொன்ராஜ் அமைச்சர் ஆனந்துடன் சந்திப்பு

ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பொன்ராஜ். தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் அனைத்து விவசாயிகள் நலச்சங்க தலைவரான பொன்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை சார்ந்த இளைஞர்கள் பலருடன் இணைந்து தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறார்.

தொகுதியில் திறம்பட கட்சி பணியாற்றி வரும் பொன்ராஜ் ஸ்ரீவைகுண்டம் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பொன்ராஜ் தவெக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்சிஆனந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அமைச்சர் ஆனந்த், தகவல்தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சி பணிகளை ஐ.டி.விங் மூலமாக திறம்பட மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பொன்ராஜிடம் எடுத்துரைத்தார்.

மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் வழக்கறிஞர் பொன்ராஜ்க்கு ஸ்ரீவை எம்.எல்.ஏ., அன்னை விஜி.சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்