தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது இல்ல திருமண விழா நடந்தது.
இவ்விழாவில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன்ராஜா, ஸ்ரீவை சரவணன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வர்டு கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீவைசுரேஷ்தேவர், மாவட்ட செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் அஹமதுசாகிபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
விழாவில் பங்கேற்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நிருபர்களிடம் கூறியதாவது, கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிர் இழந்த 41பேரின் குடும்பத்திற்கு மனிதாபிமானம் அடிப்படையில் தமிழக முதல்வர் அரசுப்பணி வழங்கியுள்ளார். இதில் எந்த தவறும் இல்லை.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று பா.ஜ.க வானதிசீனிவாசன் கருத்திற்கு ஏற்ப, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மட்டுமல்ல, இதற்கு முன்னதாக நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களின் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கிடவேண்டும்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திமுக தலைவரை விமர்சிப்பதில் அரசியல் நாகரீகத்தை தான் கடைபிடித்து வருகிறார். முதல்வர் விஜய் தனது ஸ்டைலில் கருத்துக்களை தெரிவிக்கிறார் இதில், குறை சொல்ல எதுவும் இல்லை.
ஆறாம்பண்ணை தாமிரபரணி ஆற்றின் கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும், அராபத் நகரில் ரேசன் கடை அமைக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்திடம் பேசியுள்ளோம், அவரும் இதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.
பேட்டியின்போது, மாநில துணை பொதுச்செயலாளர்கள் சாகுல் ஹமீது, முஹம்மது யூசுப், மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி முகம்மது நஜிப், கன்னியாகுமரி முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர்கள், கரச்சப்பா, ராசுக்குட்டி, மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்கள் முகம்மது சபிர், சிக்கந்தர் பாஷா, இளைஞர் அணி நிர்வாகிகள் அமீர்கான், ஜாபர் சாதிக், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாபிரபாகரன், அலீப்மீரான், ஆறாம்பண்ணை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


