spot_img
25.9 C
New York
Thursday, July 16, 2026

Buy now

spot_img

நாசரேத்தில் காமா ஜெபக்குழுவின் சார்பில் அபிஷேகப் பெருவிழா

நாசரேத்தில்  காமா ஜெபக்குழுவின் சார்பில் நடந்த அபிஷேகப் பெருவிழாவில்  திரளானோர் பங்கேற்றனர்.

நாசரேத் பரி.யோவான் பேராலய வளாகத்தில்  காமா ஜெபக்குழுவின் 26 வது அபிஷேகப்பெருவிழா 3 நாட்கள் நடந்தது. பரி.யோவான் பேராலய  உதவிக்குரு தனசேகர் ராஜா ஜெபித்து  தொடங்கி வைத்தார். காமா ஜெபக்குழு ஸ்தாபகர் குருவானவர் சாமுவேல் வரவேற்றார். காமா ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். விருதுநகர்  கிராம மிஷனெரி  இயக்க ஊழியர்  டேவிட் கணேசன்  அபிஷேக செய்தி அளித்தார்.

இதில் நாசரேத், பிரகாசபுரம், வகுத்தான்குப்பம், மூக்குப்பீறி, வாழையடி, திருமறையூர், அகப்பைகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். காமா  ஜெபக்குழு செயற்குழு  இயக்குனர்  தனபால் நன்றி கூறினார்.

பரி.யோவான் பேராலய தலைமைகுரு. ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் நிறைவு ஜெபம் செய்தார்.

ஏற்பாடுகளை நாசரேத் காமா ஜெபக்குழு ஸ்தாபகர் சாமுவேல் , தலைவர் பில்லிகிரஹாம், உப தலைவர்  மர்காஷிஸ் மோசஸ், செயலாளர்  ஜெபின், இணைச்செயலாளர்கள் லவ்சன், ஜெபக்குமார், பொருளாளர் மேஷாக், பாடகர் குழு தலைவர் ஜோயல்,  செயற்குழு செயலர் செல்வின்,  இணை  ஒருங்கிணைப்பாளர்கள் குரூஸ் மாசில்லாமணி, ஜெஸ்வின் பிரான்சிஸ், பாடகர் குழு இயக்குனர்  பவுளி திலக் சாமுவேல், கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  ஞானராஜ், ஜோசப் பர்னபாஸ், தினகரன் ஜோசப், கன்வீனர்கள் கிங்ஸ்லி யாபேஸ், ஜாண்சன்,  சென்னை ஏரியா செயலர்  காட்வின், மிடியா இயக்குனர்  ஜெரால்டு,  கெளரவ ஆலோசகர்கள்  நெய்ல்சன், முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், கூட்ட பொறுப்பாளர்கள்   கேபிரியல் ஜோன்ஸ் , ஜெனிஸ் ஜான் ஜோசப், ரூபஸ் லிவிங்ஸ்டன், சாலமோன், ஜெனிஸ்டன்பெராக், ஜெரோன்சன் மற்றும் காமா ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்