spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

நாசரேத் நூலகத்தில்இலக்கிய மன்ற கூட்டம்

நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.

வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார்

நிகழ்வில் எழுத்தாளர் ஜேம்ஸ் ராஜா எழுதிய பாளை நினைவுகள் என்ற நூலை மூக்குப்பீறி கவிஞர் தேவதாசனும், கல்லூரி வாசம் என்ற நூலை ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டியும் திறனாய்வு செய்து பேசினர்.

தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன், எழுத்தாளர் மணிமொழிச்செல்வன், பேராசிரியர் காசிராசன், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், மதிமுக மாவட்ட செயலாளர் ரஞ்சன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். எழுத்தாளர் ஜேம்ஸ் ராஜா ஏற்புரை ஆற்றினார்.

இதில் வள்ளுவர் வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்