K. பாலமுருகன்
செங்குளம்… 82484 97853
எட்டணாவிற்கு வக்கில்லாத பாதவத்தி..
முருவா சந்தை போனும் கை கால கழுவிட்டு வா
எந்த சந்தைமா பெருமாள்குளம்
ம்ம்ம்..
அம்மா கை விரல
பிடிச்சிட்டு கூடவே
போறேன் சந்தைக்கு
ஆத்தா மவனுமா
சந்தைக்கி கிளம்பியாச்சி
ஊருக்கு வெளியே
காட்டு வழிப்பாதை
வழித்துணைக்கு
மலையரசனையும்
எங்க முனியசாமியையும்
கும்பிட்டு நடக்றோம்
வழிநெடுக பேசிக்கிட்டே பயணம்
உனக்கு சந்தைல என்ன வாங்கி தரணும்
யம்மா எனக்கு
பாயசம் வாங்கிதா..
சரி..
அம்மா கூட ஒட்டமும்
நடையும் மா சந்தை
வந்தி சேந்தாச்சி
சந்தை பூரா கூட்டம்
அம்மாவை பத்தி தெரியும்
மொதல்ல மளிகை கடை பொருள்
அப்பறம் காய்கறிகடை
அடுத்து மீன் விக்கிறவங்க கிட்ட
சால மீன் எப்படி
ரூவாய்க்கு நாலுமா
போனவாரம் சாலமீன் ரூவாய்க்கு ஐஞ்சுதானே
சரிதான்மா ஆனா
இந்தவாரம் நெலம இதான்
அடுத்து சால கருவாடு ரூவாய்க்கு
எத்தனை மா
கருவாட்டுக்கார அம்மா தாயி ரூவாயக்கு ஐஞ்சி
நம்ம கவனம் பூரா
பாயசம் வாங்கி குடிக்கிற அவங்க
டம்ளர் மேலதான்..
கருவாடு வாங்கிபெறவு
பண்டம் வாங்க வருவா.இது கூட
பொறந்த பொறப்புகளுக்காக
எல்லா முடிஞ்சி கணக்கு பாக்கா
ஒத்த ரூவா மிச்சமில்ல ..
எப்ப காசு மிச்சமானாலும் முந்தியில முடிஞ்சி வைப்பா. இப்ப மிஞ்சனதினு
முந்தியில ஒன்னுமில்ல..
நானோ பாயச கடைக்கு வந்தி
ஊத்தி வச்ச பாயச கிளாஸ்ல கை வைச்சி
எடுக்க நிக்கேன்..
கிளாஸ வச்சிட்டு இங்க மொதல்ல
ஏன்மா..மொதல்ல
வா இங்கே..
அம்மாகிட்ட போறேன்
ஏன்மா. இங்கபாரு
போண்டா இருக்கு
வடை முறுக்கு இருக்கு அத தாரேன்
சரியா..
சரிமானு. சொல்லிட்டு
பாயச கிளாஸ பாக்கேன் ஒருபையன்
பாயசம் குடிக்க
அந்த பையன் அம்மா
தலையை வருடிட்டு
நிக்கா
என்னைக்குமில்லாம அன்னைக்கு அம்மா வெரசாலா வேவமாக
நடக்கா அவ எட்டு
வைச்ச நடைக்கு
கூட நடக்க முடியாம ஒடியாறேன்.. கூடவே
வழிநெடுக பேசவே இல்ல….
வீடு வந்தி
சேறோம்…
என்னைகட்டிட்டு ஓவெனு கதறி அழுறா..
நான் எட்ணா மிச்சம்
பிடிக்க வக்கிலா பாதவத்தினு
அழுதுகிட்டே இருக்கா..
நானோ சரிமா
விளையாட போட்டானு சொல்லிட்டு என்
சைக்கிள் டயர் வண்டியை எடுத்திட்டு
டூர் டூர்று ஒடிபோறேன்…


