spot_img
24.9 C
New York
Thursday, July 16, 2026

Buy now

spot_img

நாசரேத்தில் முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!52 மரக்கன்றுகள் நடப்பட்டது

நாசரேத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடப்பட்டது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நாசரேத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமை தாங்கினார். நாசரேத் பேரூர் கழக செயலாளர் சுதர்சன் முன்னிலை வகித்தார்.

இதில் நாசரேத் பேரூர் கழக எல்லைக்குட்பட்ட இடங்களில் 52 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகள் மற்றும் திருமறையூர் சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னதாக நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் அமைந்துள்ள நாசரேத்தின் தந்தை கனோன் மர்காஷிஸ் நினைவிடத்தில் த.வெ.க. சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் நாசரேத் சந்தி பஜார், பேருந்து நிலையம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

இவ் விழாவில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் குட்டி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரேம் பாண்டியன், மாவட்ட தொழில் முனைவோர் அணி செயலாளர் வினோத். மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் செந்தில் வேலவன், மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் கீதா பிளாரென்ஸ், நாசரேத் பேரூர் கழக பொருளாளர் ஜெரின், ஆழ்வை மத்திய ஒன்றிய இணை செயலாளர் சிவா, நாசரேத் பேரூர் கழக இணை செயலாளர் திலக் சாமுவேல், துணைச் செயலாளர்கள் அபிஷேக், மதுரம் கிதியோன், தகவல் தொழில் நுட்பச் செயலாளர் ஜெயராஜ், இளைஞரணி செயலாளர் வினோத், மாணவர் அணி செயலாளர் ஜெஃபின், மாணவர் அணி இணை செயலாளர் சாம் பென்னி, தொண்டரணி செயலாளர் மகேஷ், இணைச் செயலாளர் ஆனந்த், மகளிர் அணி செயலாளர் கௌசல்யா, இணைச்செயலாளர் பிரிஸ்கில்லாள், இளம் பெண்கள் அணி செயலாளர் சுமதி, இணைச் செயலாளர் பரமேஸ்வரி, செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், கார்த்திக், வார்டு செயலாளர்கள் முத்து மயில், ஜெயக்கொடி, வேல்முருகன், ஆல்வின், அப்பலோஸ், ஜோசப்ராஜ், ஜாண், தாஸ், சுரேஷ் ஆபேல், கமலதீபன், ஆல்வின், மர்காஷிஸ், இம்மானுவேல், தீபக், உதயம், விமல், சண்முகசுந்தரம் மகாலிங்கம், திரவியசுதாகர், தினேஷ், ஸ்டேஃபின், சுப்பிரமணியன், செல்வகுமார், ராஜன், விஜய், விக்னேஷ், யாபேஷ், விஜய் ஆனந்த் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்