spot_img
24.9 C
New York
Thursday, July 16, 2026

Buy now

spot_img

நாசரேத் அருகே மூக்குப்பீறி – பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி – பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் மூக்குப்பீறி – பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையானது மூக்குப்பீறி, ஒய்யான்குடி, குளத்துக்குடியிருப்பு, சாலைப்புதூர், கோயம்புத்தூர், சின்னாளபட்டி ஆகிய இடங்களில் உள்ளன. இந்திய ஏகரட்சகர் சபையின் மகாசபை கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.இதில் பிரகாசபுரத்தில் இருந்து நிர்வாக குழு உறுப்பினர்களாக குரு. மத்தேயு ஜெபசிங், ஐசக் ஜோதிராஜ், ஆபிரகாம் ராஜன், நல்லதம்பி ஆகியோர் ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூக்குப்பீறியிலிருந்து நிர்வாக குழு உறுப்பினர்களாக நவரத்தினம், கோயில்ராஜ், ஜெயபால், மோகன் விக்டர் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

பின்னர் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் இந்திய ஏகரட்சகர் சபைத் தலைவராக குரு. மத்தேயு ஜெபசிங், செயலாளராக கோயில்ராஜ், பொருளாளராக நவரத்தினம் ஆகியோர் ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் சிறப்பு ஆராதனை மூக்குப்பீறி – பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபை ஆலயத்தில் வைத்து தலைமை போதகர் சௌந்தரராஜன் தலைமையில் நடந்தது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விசுவாசப் பிரமாணம் உறுதிமொழி வாசித்து பதவிப்பிரமாணம் எடுத்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்