Tue. Jul 1st, 2025

மாநில அளவிலான சிலம்பப் போட்டி, கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் அணிக்கு கோப்பை

பண்டாரவிளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு 3 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி மற்றும் கராத்தே போட்டி கனி கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் பெருங்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவக்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட சிலம்பம் மற்றும் கராத்தே மாணவர்கள் பங்கேற்றனர்.

முதலாவது பரிசை நாசரேத் ஆலன் திலக் அணியினரும் இரண்டாவது பரிசை தூத்துக்குடி அணியும் மூன்றாவது பரிசை தென்காசி அணியும் வெற்றி பெற்றது.

முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி .சண்முகநாதன் பங்கேற்று மாணவ மாணவியருக்கு தற்காப்பு கலையின் அவசியத்தையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் கூறி மாணவர்களுக்கு வாழ்த்துரை கூறினார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெருங்குளம் பேரூராட்சி தலைவி டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் பரிசுகளை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துரை கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கிழக்கு செயலாளர் காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மேற்குச் செயலாளர் அழகேசன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் ஒன்றிய பெருங்குளம் பேரூராட்சி அதிமுக செயலாளர் வேதமாணிக்கம் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் இப்ராஹிம் தீயணைப்பு துறை உதவி ஆய்வாளர் பாஷா தூத்துக்குடி மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க பொருளாளர் முத்து சங்கர் பண்டாரவிளை பால் துறை, பெருமாள், மாஸ்டர் தமிழரசன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை உலக சிலம்ப தற்காப்பு கலை சங்கத் தலைவர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்.

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்

Related Post