தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், ஸ்ரீவெங்கடஸ்வரபுரம் கிராமம் பேய்குளத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சார்பில் நேரடியாக கொள்முதல் செய்ய நெல் குடோன் உள்ளது

விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் நெல் விலை குறைவாக உள்ள காரணத்தினால் இங்கு விற்பனை செய்து வந்தனர்
இந்த வருடம் அறுவடை செய்த நெற்பயிர்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தனர்

அரசு நெல் கொள்முதல் குடோன் திறக்காத காரணத்தினால், புன்னகை தேசம் பத்திரிகையினரிடம் இது சம்பந்தமாக கோரிக்கை விடுத்தனர்
விவசாயிகளின் கோரிக்கைகளை அடுத்து வேளாண்மை துறையினர் மூலமாக பேய்க்குளம் நெல் கொள்முதல் குடோனை திறப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிய இரு தினங்களுக்குள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சார்பில் தெரிவிக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நெல் கொள்முதல் நிலைய களத்தில் கொண்டு வந்து கொட்டினர்
ஆனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒப்புதல் அளித்து சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் பேய்க்குளம் நெல் கொள்முதல் நிலையம் இன்று வரை திறக்கப்படவில்லை
இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகிகளிடம் கேட்டால் இன்று திறக்கப்படும், நாளை திறக்கப்படும் என்று பதில் அளிக்கின்றனர்
இதனுடன் ஒப்புதல் வழங்கப்பட்ட பிற நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் பேய்க்குளம் நெல் கொள்முதல் நிலையம் மட்டும் செயல்படவில்லை
பேய்க்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லை கொட்டிய விவசாயிகள் 20 நாட்களாக இரவும் பகலுமாக காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர்
மழை பெய்தால் நெல்லின் நிலை என்ன ஆகுமோ எந்த கவலையில் விவசாயிகளில் உள்ளனர்
இது குறித்து நெல்லை கொட்டிய விவசாயிகள் கூறும் போது, போதிய மழையும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் மறுத்து வருவதாகவும், அவர்களை கண்டித்து பேய்க்குளம் காமராஜர் சிலை முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்
அரசு உத்தரவு வழங்கியும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


