நாசரேத்தில் விவசாயிகள் 100 சதவீதம் வாக்களிக்க நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
ஏரல் வட்டாட்சியர் பங்கேற்றார்.
நாசரேத் மில்ரோடு பகுதியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்து 100% வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், ஏரல் வட்டாட்சியர் கலந்து கொண்டு விவசாயிகள் 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செல்வகுமார். கிராம நிர்வாக அதிகாரி சிவராமன். உதவியாளர் சத்தியசீலன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


