spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img

ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் தாளாளராக பதவி ஏற்பு

சி எஸ் ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ் டி கே ராஜன் அணியினர் வெற்றி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து திருமண்டல லே செயலரும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் மேலாளருமான எஸ் டி கே ராஜன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாளாளர்கள் நியமன ஆணையை வழங்கினார்.

இதில் தாவீது சுந்தரானந்தனர் சபை ஆசிர்வாதபுரம் டிடிடிஏ குருகால் பேரி மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மார்ட்டின் ரஞ்சித் சிங் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் சேகர தலைவர் டேவிட் ஞானையா ஆரம்ப ஜெபம் செய்து வைத்தார்.

இதில் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் சாத்தான்குளம் ஆர் எம் பி புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுபாஷ், ராபின் பிரகாஷ், ஸ்டீபன் ,சபை மன்ற செயலாளர் இன்பராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் சாமுவேல்ராஜ்,ஏசுவடியான், ஜெபராஜ், சபை மன்ற உறுப்பினர்கள் கோயில் பிச்சை ,தேவ பிச்சை , சுதாகர் பெஞ்சமின், சாமுவேல், பெலிக்ஸ், ஜான்சன், ஆசிரியை பொன் சரோஜினி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி ஸ்ரீதர், நாசரேத் கல்லூரி பேராசிரியர் ஞான செல்வன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விக்டர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பள்ளி தாளாளர் மார்ட்டின் ரஞ்சித் சிங் ஏற்புரை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை லதா தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்