Thu. May 1st, 2025

ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது.

முகாமிற்கு, கிராம உதய நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். தனி அலுவலர் ராமச்சந்திரன், தன்னார்வ தொண்டர்கள் முத்துராஜ், செல்வன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி வரவேற்றார்.

ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் திவ்யா கண் பரிசோதனை செய்தார். இதில், 25பேர் இலவச கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், தன்னார்வ தொண்டர்கள் வினோத், செல்வன்துரை, ஜெயராம், விஜய்குமார், ஜெஸிமா, ஆனந்தசெல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post