Sat. Aug 23rd, 2025

சாத்தான்குளம்மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மாவட்ட அளவிலான 65வது குடியரசு தின தடகள போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையால் நடத்தப்பட்டது. இதில் 9 குறுவட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் ஞான ஜெய அண்டனி செல்வன் 1500மீ ஒட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தையும் பெற்று மாநில அளவில் நடைபெற இருக்கும் தடகளப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அருட்தந்தை ரூபர்ட், உடற் கல்வி ஆசிரியர் சகாயரீகன் மற்றும் ஆசிர்யர்களும் பெற்றோர்களும் பாராட்டினர்.

Related Post