Wed. Jan 14th, 2026

70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் செட்டி தெருவில் ஹபீப் அவர்களின் வீட்டின் வளர்ப்பு பூனைக் குட்டி சுமார் 70 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்து ஒரு நாள் முழுவதும் மேலே எடுப்பதற்க்காக வீட்டில் உள்ளவர்கள் முயற்சி செய்து முடியவில்லை.


இன்று குளச்சல் தீயணைப்பு காவல்துறையினருக்கு சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் அவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் 70 அடி கிணற்றில் விழுந்த பூனைக் குட்டியை உயிருடன் மீட்டனார் தீயணைப்பு காவலருக்கு அப்பகுதி பொதுமக்களும், உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழற்சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

Related Post