Wed. Sep 18th, 2024

கனரக வாகனங்களில் கரம்பல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் குளங்களில் இருந்து வண்டல் மற்றும் கரம்பல் மண் அள்ளி டிராக்டர் முதல் அனைத்து கனரக வாகனங்களில் கொண்டு விவசாய நிலங்களில் தட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வண்டல் மண் அள்ளுவதற்கு வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்பட்டு, குளத்தில் மண் அள்ளுவதற்கு நீர்வளத்துறை பொதுப்பணித் துறையினர் நடைச்சிட்டு வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் லாரி முதற்கொண்டு அனைத்து கனரக வாகனங்களிலும் வண்டல் மண், கறம்பல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சாத்தான்குளம் தாலுக்காவில் மட்டும் நீர்வளத்துறை மணிமுத்தாறு கால்வாய் முலைக்கரைப்பட்டி பிரிவு அலுவலகத்தில் இருந்து மணல் அள்ளுவதற்கு ஒரு யூனிட் அளவிலான டிராக்டர் வாகனத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு டிராக்டர் வாடகை மற்றும் ஜேசிபி வாடகை உயர்ந்து மூன்று மடங்கு செலவு கூடுகிறது. டிராக்டர் வாகனம் கிடைப்பதில் சிரமமும் உள்ளது

எனவே இதர தாலுகாக்களில் வழங்கப்படுவது போல் சாத்தான்குளம் தாலுகாக்களிலும் மூன்று யூனிட் வரையிலான கனரக வாகனங்களில் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டுமென விவசாயிகளும் சமூக அலுவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Post