Thu. Sep 19th, 2024

பேய்க்குளம் பகுதி பள்ளியில் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

பேய்க்குளம் பகுதி பள்ளியில் பிளஸ்டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்க தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் கேடயம் மற்றும்  ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம்  அருகே உள்ள பேய்க்குளத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சி  தலைவர்  நடிகர் விஜய் 50வது  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பேய்க்குளம் தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜோசப் ஜெபஸ்டீன் வரவேற்றார். விழாவை முன்னிட்டு சாலைபுதூர்  ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி, ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூத் தேர்வில் முதல் மற்றும்  2 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் ஊக்கத்தொகையை நெல்லை மாவட்ட தலைவர் சஷி வழங்கினார். தொடர்ந்து பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் ஏரல் நகரத் தலைவர் ஜெகன்ராஜ், திசையன்விளை நகரத் தலைவர் கில்லி ராஜா, பேய்க்குளம் நிர்வாகிகள் மகேஷ், மதன், ஐயப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொருளாளர் மனுவேல் நன்றி கூறினார்

Related Post