Tue. Apr 29th, 2025

மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டஊழியர் மின்சாரம் தாக்கி பலிதட்டார்மடத்தில் பரிதாபம்


சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.

தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் அற்புதமணி(52). இவர் சாத்தான் குளம் துணை மின் அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் விநாயகர் கோவில் தெருவில் மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந் தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

தகவல் அறிந்து தட்டார்மடம் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post