Sun. Jun 29th, 2025

நடிகர் விஜய் கட்சி தொடக்கம். சாத்தான்குளத்தில் நிர்வாகிகள் சேலை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

சாத்தான்குளம், பிப் 5:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி தொடங்கியதை வரவேற்று நிர்வாகிகள் சாத்தான்குளத்தில் சேலை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திரைப்பட நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வந்தார்.இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தமிழக வெற்றி கழகம் என கட்சியை அறிவித்தார் இதனை அடுத்து அவரது ரசிகரும் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றிய, நகர விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சி தொடங்கியதற்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் சாத்தான்குளம் காந்தி நகர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். முன்னதாக அங்குள்ள அம்பேத்கர் சிலை மற்றும் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மாலை அனைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் ஐயப்பன், துணை செயலாளர் சுரேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திசையன்விளை நகர தலைவர் கில்லிராஜா கலந்து கொண்டு அங்குள்ள பெண்கள் 30 பேர்களுக்கு இலவசமாக சேலை வழங்கினார் தொடர்ந்து பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இதில் நகரத் தலைவர் வள்ளி, விஜயகுமார், நொச்சிகுளம் விஜி, சந்திரசேகர், புளியங்குளம் முருகன், பேய் க்குளம் அரவிந்த், மகேஷ் மற்றும் அசோகன், கண்ணன், சேர்மராஜ், பாலமுருகன், ஸ்ரீகாந்த், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Post