சாத்தான்குளம் கிராமம் காந்தி நகர் ஸ்ரீ அரசடி மாரியம்மன் கோயிலின் பின்புறம் இன்று(19.12.2025) காலை சுமார் 11.15 மணியளவில் கருப்பசாமி மகன் சுடலை (வயது 30) என்பவரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
மேற்படி சுடலை என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மேலும்
மேற்படி இறந்த நபரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் உடலுக்கு கூராய்வு செய்வதற்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கொலைக்கான காரணத்தையும் கொலை செய்தவர்களை பற்றியும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

