Thu. Jan 15th, 2026

காமராஜரை அவதூறாக பேசிய முக்தாரை கைது செய்யக்கோரி நாசரேத்தில் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நாசரேத் பஸ் நிலையம் அருகே தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பில் காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் ஐஜினஸ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் ராம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் டேனி ஜெயசிங், நகர செயலாளர் லிங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இம்மானுவேல்,நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் செல்வன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் ராஜ்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மகேஷ், இளைஞர் அணி செயலாளர் மதன், உடன்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வாசகன், துணைச்செயலாளர் வள்ளமுத்து, நகர துணை தலைவர் மோசஸ், நகர அவை தலைவர் ரவி, ஒன்றிய தொழிற்சங்க இணை தலைவர் மகேஷ், நகர தொழிற்சங்க தலைவர் சகாயம், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஐபல், துணை செயலாளர் ஆபிரகாம், நகர மாணவர் அணி செயலாளர் கேபா, ஒன்றிய இளைஞர் அணி இணை செயலாளர் யோவான், காங்கிரஸ் பிரமுகர்கள் செல்வின், கெர்சோம், சந்திரன், விஜயகுமார், செல்வகுமார், பிரகாஷ், சண்முகம் மற்றும் கோயில்ராஜ் , திருமால்,மாசானம், லோகேஷ், ராஜ், சிவா, தினா , விக்கி, ரஞ்சித் , மகீர் ,ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள், பெண்கள் உள்பட 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜினஸ்குமார் செய்திருந்தார்.

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post