Thu. Jan 15th, 2026

நாசரேத் பொறியியல் கல்லூரிக்கு புதிய பஸ்: திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி தொடங்கி வைத்தார்.

நாசரேத் பொறியியல் கல்லூரிக்கு வாங்கப்பட்ட புதிய பஸ்ஸை திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி தொடங்கி வைத்தார்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியின் புதிய பஸ் துவக்க விழா நடந்தது. கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவரக்கம் ஜெபராஜன் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல நிர்வாகியும், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியுமான ஜோதிமணி புதிய பஸ் வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருமண்டல தேர்தல் அதிகாரி நீதிபதி ஜான் சந்தோஷம், திருமண்டல நிதி அதிகாரி அன்பர்தாஸ், போக்குவரத்து துறை ( பொறுப்பு) அலுவலர் ஜோஸ் சுந்தர் மற்றும் திருமண்டல அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Post