நெல்லை மாநகரம் என்.ஜி.ஓ காலனி பகுதியில் செயல்பட்டு வரும் கதிர் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் விதைப்பந்து அறிமுக நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
சமூக ஆர்வலர் வெங்காடம் பட்டி திருமாறன் கலந்து கொண்டு மாணவ, மாணவியரிடம் விதைப்பந்துகள் தயாரிப்பதின் நோக்கம், எவ்வாறு தயாரிப்பது, தயாரித்த விதை பந்துகளை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் மனித வாழ்க்கையில் மரங்களின் முக்கியத்துவம் என்ன,? என்பது குறித்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலித்தீன் பைகளை தவிர்ப்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.
நிகழ்வில் மாணவ, மாணவியருடன் ஆசிரியர்கள் வாசுகி, சித்ரா, சத்யா, முத்தமிழ் அரசி, ராம லட்சுமி, சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

