Thu. Jan 15th, 2026

பேய்க்குளம் அருகே கல்வீசி தனியார் பேருந்து கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே உள்ளது கட்டாரிமங்கலம். மேற்படி ஊர் வழியாக காலை மற்றும் மாலையில் சவேரியார்புரத்திலிருந்து நாசரேத் வழியாக ஏரலுக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது

மேற்படி பேருந்தானது தற்போது பேய்குளத்தில் இருந்து நாசரேத் வழியாக ஏரலுக்கு சென்று கொண்டிருந்தபோது, கட்டாரிங்கமங்களம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள்  இறங்கி ஏறிக் கொண்டிருந்தனர்

அப்போது பேருந்தின் பின்புறம் மர்ம ஆசாமி பெரிய கல்லை கொண்டு தூக்கி எறிந்ததில், பின்புறம் இருந்த கண்ணாடி உடைந்தது

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பேருந்து நிறுத்தப்பட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது

Related Post