நாசரேத்தில் நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்கம் மாநாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் ஏரல்வட்டக் கிளையின் முதலாவது மாநாடு நாசரேத் ஜோதி மஹாலில் வைத்து நடைபெற்றது.
இதில் வட்டக்கிளைத் தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாபு சிவராஜ் கிருபாநிதி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், ஜெயசீலன் சேகர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் நியுபெல் ஜெபராஜ் சங்க கொடியையும், விக்டோரியா தேசிய கொடியையும் ஏற்றினார்கள். செயலர் வேதசிகாமணி பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில பொதுச்செயலளர் பர்வதராஜன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டில் மூத்தோர் உடல்நலம் காத்தல் குறித்து மருத்துவத்துறை ஆண்ட்ரூ ராக்லண்ட் ஆலோசனை வழங்கினார். மாவட்ட தலைவர் சாம்பசிவன், செயலர் முத்தையா, பொருளாளர் கண்ணையா ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்து இணை செயலர் பிரின்ஸ் ஜட்சன், தாமஸ் மனோ ஆகியோர் விளக்கம் அளித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25.03.2025-ல் நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேறிய நிதி மசோதா ஓய்வூதியர்களின் உரிமைகளை பறிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும், கம்யூடேஷன் பிடிக்கும் காலத்தை பத்தாண்டுகளாக குறைக்க வேண்டும், 70 வயது நிறைந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏரல் வட்ட பொருளாளர் உத்தமன் நன்றி கூறினார்.
த. ஞானராஜ்கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

