திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் தினம் வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
முதல்வர் முனைவர். என்.பாலாஜி தலைமை விருந்தினர்களையும், முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் அன்புடன் வரவேற்று, கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.
அதனை தொடர்ந்து கல்லூரியின் ஆலோசகர்களள் ரசாக் மற்றும் வாசு ஆகியோர் தங்களுடைய தலைமையுரை மற்றும் சிறப்புரையில் மாணவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் இருந்து அவர்களின் பெற்றோர்களுக்கு நற்பெயர் பெற்று தர வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள்.
மேலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களின் பேச்சுக்களை கேட்டு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். கிருஷ்ண பாலகுருநாதன் உரையாற்றுகையில், மாணவர்கள் கல்வி கற்று தங்களை மேன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய அணுகுமுறையினை மேன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் மாணவர்கள் தற்கால தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிந்து கொண்டு தங்களின் திறமைகளையும், அறிவினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பேச்சாளர் மற்றும் ஜோஹோவில் மனித வளத்துறை தலைவரான, சார்லஸ் காட்வின் மாணவர்கள் எவ்வாறு வாழ வேண்டும், எந்தெந்த வழிகளில் சென்று பாதை மாறி சென்று விட கூடாது என்பதை அனைவரும் அறியும் விதம் நகைச்சுவையுடன் உரையாற்றினார். மேலும் அவர் தன்னுடைய உரையில் மாணவர்கள் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக வைத்து தங்களின் இலக்குகளை அடைய வேண்டும் என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து நிறுவன தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் அவர்களின் உதவி தொகையாக ரூ.32,50,000/-(முப்பத்திரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்), அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற 667 மாணவர்களுக்கு பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
விழாவில் 100% வருகையைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, முதலாம் ஆண்டுத் தலைவர், முனைவர்.பி. பாலமுருகன், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாகப் பேசினார். துணை முதல்வர், முனைவர்.எஸ். சௌந்தரராஜன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வேலம்மாள் கல்விக் குழுமத்தலைவர் எம். வி. முத்துராமலிங்கம்,இயக்குனர் எம் வி. எம். சசிகுமார் மற்றும் வேலம்மாள் குளோபல் மருத்துவமனையின் இயக்குனர் எஸ். சந்தோஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியினை முதல்வர்,துணை முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் ஏனைய பேராசிரியர்கள்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்

