வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இருபெரும் விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையின் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் முருகேசன், பழைய மாணவர் சங்க துணைத் தலைவர் தேவாசீர்வாதம் சீயோன் நகர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முன்னாள் தாளாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி பாடகர் குழுவினர் இறைவணக்கப் பாடல் பாடினர்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா. ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பேசினார். பழைய மாணவர் சங்கம் சார்பில் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணனுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிகளை பழைய மாணவர் சங்க செயலாளர் அதனாஷியஸ் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் குருவானவர் எட்வின்,
முன்னாள் தலைமை ஆசிரியர்
ஜெபஸ்டின் செல்வக்குமார், பரமன்குறிச்சி ராகவன், ஆசிரியர்கள், முன்னாள் இந்நாள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.
நிறைவாக பள்ளி மாணவிகளின் நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
94 87 44 56 55

